புதிதாக அமைக்கப்படும் 6 வழி பாதை - அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்
புதியதாக அமைக்கப்படவுள்ள 6 வழிபாதையால் பாதிக்கப்படுவதாக கூறி பொதுமக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மானாமதி வழியாக கிழக்கு கடற்கரை சாலை முதல் ஜி.எஸ்.டி சாலை வரை 6 வழி பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால், அப்பகுதியில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், அங்கு வசிக்கும் மக்களை காலி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.
இது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது.
ஆனால், இந்த கூட்டத்தில் தனியார் தொண்டு நிறுவன அதிகாரிகளை வரவழைத்து, காளான் வளர்ப்பு, தேனி வளர்ப்பு உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.
இதனால், பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜியை பொதுமக்கள் சந்தித்து புகார் அளித்தனர்.