அயர்லாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து...35 ரன்கள் வித்தியாசத்தில் நியூசி. வெற்றி
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்12 சுற்றில் அயர்லாந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்கடித்தது.
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஃபார்முக்குத் திரும்பிய கேப்டன் கேன் வில்லியம்சன், அரைசதம் அடித்து 61 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. பின்னர் 186 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து, ஆரம்பத்தில் சிறப்பாக ஆடினாலும், ஓவர்கள் செல்ல செல்ல விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. வேகப்பந்துவீச்சாளர் ஃபெர்குசன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அரைசதம் அடித்த வில்லியம்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Next Story