புதிய தொலைத் தொடர்பு மசோதா 2022-வாட்ஸ் அப், கூகிள், ஜூம், கூகிள் டியோ உரிமம் பெறுவது கட்டாயம்

x

புதிய தொலைத் தொடர்பு மசோதா 2022-வாட்ஸ் அப், கூகிள், ஜூம், ஸ்கைப், கூகிள் டியோ உரிமம் பெறுவது கட்டாயம்

புதிய தொலைத் தொடர்பு மசோதா 2022ன் படி வாட்ஸ் அப், கூகுள், ஜூம், ஸ்கைப், கூகிள் டியோ ஆகிய நிறுவனங்கள் தங்களின் சேவைகளை இந்தியாவில் தொடர உரிமம் வாங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், தொலைத்தொடர்பு சேவையின் ஓர் அங்கமாக OTT செயலிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளை பெறுவதற்கு நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும் என்று புதிய மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா குறித்து டெல்லியில் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது, தொலைபேசி உபயோகிப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை இந்திய தொலைத்தொடர்பு மசோதாவின் முதன்மை நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.

அத்துடன், புதிய தொலைதொடர்பு மசோதா சைபர் குற்றங்களை கணிசமாக குறைக்கும் என்றும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் புதிய தொலைதொடர்பு மசோதாவை நடைமுறைப்படுத்துவதில் எந்த அவசரமும் காட்டவில்லை எனவும், இது 6 முதல் 10 மாதங்களுக்குள் இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்