முதல்வர் ஸ்டாலினுக்கு புதிய முதன்மை மற்றும் தனிச் செயலர்.. உதயச்சந்திரன், உமாநாத்தை மாற்ற வாய்ப்பு
தமிழக அரசில் அமைச ்சரவை மாற்றத்தை தொடர்ந்து, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசின் அமைச்சரவையில் 3வது முறையாக மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளர் அமுதா அல்லது சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரில் ஒருவர் முதலமைச்சரின் தனிச்செயலாளராக மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சரின் தனிச்செயலாளர் உமாநாத் சுகாதாரத்துறை செயலாளராகவும், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் நிதித்துறைச் செயலாளராகவும் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இதுதவிர 2 ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில் பணிபுரிந்த மாவட்ட ஆட்சியர்களும் மாற்றப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
Next Story