காட்டு யானைகளை பிடிக்க புதிய திட்டம்

x

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 6 நாள்களாக சுற்றித் திரியும் 2 காட்டு யானைகளை பிடிக்க, ஆப்ரேஷன் ஏலகிரி திட்டத்தின் கீழ் கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் குழு சார்பில் மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. முதுமலையில் இருந்து சின்னத்தம்பி என்ற யானையும், ஆனைமலையில் இருந்து உதயன் மற்றும் வில்சன் என இரண்டு யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. தற்போது கும்கி யானைகள் பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காட்டு யானைகள் ஏழருவி என்ற பகுதியில் சுற்றித் திரிகின்றன.


Next Story

மேலும் செய்திகள்