புதிய நாடாளுமன்றம்.. பிரதமர் திறக்கலாமா?.. சாவர்க்கர் பிறந்தநாளில் திறப்பது ஏன்?

x

862 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா மே 28ல் நடைபெற உள்ளது.

மே 28 ஹிந்து மகா சபையை கட்டமைத்த வீர சாவர்க்கரின் பிறந்த நாள் என்று கூறி, இந்த தேதியில் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழவை நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தி படுகொலை வழக்கில், சாவர்க்கர் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர்

போதுமான ஆதாரம் இல்லாத காரணத்தால் அவர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாவர்கர் பிறந்த தேதியை தேர்ந்தெடுத்துள்ளது, சுதந்திர இந்தியாவை கட்டமைத்த மகத்தான தலைவர்களை அவமானப்படுத்தும் செயல் என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். அவருக்கு பதிலாக குடியரசு தலைவரை வைத்து, திறந்து வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் இதர எதிர்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

இதற்கு எதிர்வினையாற்றிய பாஜக செய்தித் தொடர்பாளர் கெளரவ் பாட்டியா, வீர சாவர்கர் பற்றி அனைத்து இந்தியர் களும் பெருமை கொள்கின்றனர் என்றும், திறப்பு விழா தேதியை குறை சொல்பவர்கள், சாவர்கரின் கால் தூசிக்கும் சமமானவர்கள் இல்லை என்றும் கூறியுள்ளார்.

குடியரசு தலைவர் நாட்டின் தலைவர். ஆனால் அரசாங்கத் தின் தலைவரான பிரதமர் தான் நாடாளுமன்றத்தை, அரசின் சார்பில் வழி நடுத்துபவர் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ட்வீட் செய்துள்ளார். சர்ச்சைகளே இல்லாத விஷயங் களில் கூட சர்ச்சைகளை ஏற்படுத்துவது காங்கிரஸின் வழக்கமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்