எந்தெந்த மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்?... குடியரசுத் தலைவர் அதிரடி உத்தரவு

x

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநில புதிய ஆளுநராக ரமேஷ் பாசிஸ், அருணாச்சல பிரதேச ஆளுநராக கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக், சிக்கிம் ஆளுநராக லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

அசாம் ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா, ஹிமாச்சல பிரதேச ஆளுநராக சிவ பிரதாப் சுக்லா, ஆந்திரப் பிரதேச ஆளுநராக அப்துல் நஸீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரப் பிரதேச ஆளுநராக இருந்த பிஸ்வா பூஷன் ஹரிசந்தன் சத்தீஸ்கர் ஆளுநராகவும், சத்தீஸ்கர் ஆளுநராக இருந்த சுஷ்ரி அனுஷ்யா உய்க்யே மணிப்பூர் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பீஹார் ஆளுநராக இருந்த பஹு சவ்ஹான் மேகாலயா ஆளுநராகவும், ஹிமாச்சலப் பிரதேச ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பீகார் ஆளுநராகவும், அருணாச்சலப் பிரதேச ஆளுநராக இருந்த பி.டி.மிஸ்ரா லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்