காலநிலை மாற்றத்தால் புதிய ஆபத்து... இனி விமான பயணமும் 'மரண பயம்' தான்..! ஆராய்ச்சியாளர்களின் 'அதிரும்' வார்னிங்

x

கால நிலை மாற்றம் காரணமாக அட்லாண்டிக் வான் பகுதியில் பறக்கும் விமானங்களில் அதிர்வுகள் அதிகரித்துள்ளதாக வும், இனி வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்க கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அட்லாண்டிக் வான் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை அலசுகிறது இந்த தொகுப்பு...

உலகின் மற்ற இடங்களில் பயணிக்கும் விமான பயணத்திற்கும், வடக்கு அட்லாண்டிக் பிரதேசத்தின் மீது பயணிக்கும் விமான பயணித்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு...

ஆம் மற்ற விமான பயணமெல்லாம் நேர் கோட்டில் தேர்வு செய்யபட்டு நடக்கும், ஆனால் வடக்கு அட்லாண்டிக் பகுதியில் விமானம் பயணிக்கும் போது காற்று, ஈரப்பதம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு வெவ்வேறு வேகங்களில் வலைந்து வலைந்துதான் இலக்கினை சென்றைடையும்.

வழக்கமாக காற்றின் வேகத்திற்கு ஏற்றாற் போல, விமானத்தை சமநிலைப்படுத்த, வேகத்தை குறைக்கவும், அதிகரிக்கவும் செய்யும் போது அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம்.

இந்த அதிர்வின் போது திடீரென்று விமானத்தில் உள்ளவர்களை தூக்கி வாரிப்போட்டதைப்போல உணர்வார்கள்.... இதைத்தான் விமான அதிர்வுகள் என்பார்கள்...

கால நிலை மாற்றத்தின் காரணமாக வடக்கு அட்லாண்டிக் பகுதியில் வெப்ப நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்,

கார்பன் உமிழ்வுகள் இதற்கான முக்கிய காரணமாக மாறியுள்ளதாகவும் இங்கிலாந்து நாட்டில் உள்ள ரீட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்..

வடக்கு அட்லாண்டிக் பகுதியின் வான்பரப்பில் மட்டும் எப்போதும் கணிக்க முடியாத அளவிற்கு அதிர்வுகள் இருக்கின்றன. குளிர்ந்த காற்றும், வெப்பக்காற்றும் சந்திக்கும் போது காற்று சீரானதாக இல்லாமல், விமானங்களை அது பாதிக்கின்றது.

அதிகரித்து வரும் கால நிலை மாற்றத்தால் கடந்த காலத்தைவிட தற்போது விமான அதிர்வுகள் அதிகரித்து விட்டதாகவும், வரும் காலங்களில் இது இன்னும் அதிகரிக்க கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்...

சீட் பெல்டுகளை சரியானபடி அணிந்து கொள்வது மற்றும் விமானத்தின் உட்கட்டமைப்பில் மாற்றம் செய்வதன் மூலம் இதற்கு தீர்வு காண முடியும் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்