ரூ.40 லட்சம் செலவில் புதிய கட்டிடம் - முன்னாள் மாணவரின் அசத்தல் செயல்

x

திசையன்விளை உலக மீட்பர் மேல்நிலைப்பள்ளிக்கு 40 லட்சம் மதிப்பிலான வகுப்பறை கட்டிடம் கட்டிக் கொடுத்து முன்னாள் மாணவர் அசத்தியுள்ளார். திசையன்விளையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், சிங்கப்பூரில் தொழில் அதிபராக இருந்து வரும் நிலையில், தான் பயின்ற உலக மீட்பர் மேல்நிலைப்பள்ளிக்கு 40 லட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளார். அதற்கு தனது தாய் மரகதம், தந்தை கோபால் பெயர் சூட்டியதுடன், தன்னுடன் பயின்ற சக மாணவர்களை ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறக்க வைத்துள்ளார். மேலும், தனது தாய், தந்தை, பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் ஆகியோரை குத்துவிளக்கு ஏற்றச் சொல்லி கவுரவப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்