Twitter -க்கு போட்டியாக களமிறங்கும் புது App - என்னென்ன சிறப்புகள் தெரியுமா?
டிவிட்டருக்கு போட்டியாக, threads என்ற சமூக ஊடக செயலியை மெட்டா நிறுவனம் உருவாக்கியுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா உருவாக்கியுள்ள இந்த செயலி, டிவிட்டரைப் போன்ற வடிவமைப்பையும், செயல்பாடுகளையும் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் threads கணக்குகளை தொடங்க வகை செய்யப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி தவறுதலாக வெளியிடப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டுள்ளதாக துறை சார் நிபுணர்கள் கூறுகின்றனர். விரைவில் இது அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story