நெதர்லாந்து நாட்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - அதிரடி கட்டிய போலீசார் கொடைக்கானலில் அதிர்ச்சி

x

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நெதர்லாந் நாட்டை சேர்ந்த தம்பதியினர் கொடைக்கானலில் வசித்து வருகின்றனர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலுக்கு வந்த அவர்களுக்கு 15 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மலைப்பகுதியில் தனியே அமைந்துள்ள இவர்களின் வீடு அருகே, ராம்ராஜ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்து இருக்கிறார். ராம்ராஜ் நெதர்லாந்து குடும்பத்தினருடன் நட்பாக பழகி வந்துள்ளார். தம்பதியினருக்கு தமிழ் புரியாத நிலையில், இரண்டு சிறுமிகளுக்கு தமிழ் தெரிந்தததால் அவர்களுடன் நன்றாக பழகி வந்த ராம்ராஜ், இரண்டு பேருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்து இருக்கிறார். இது குறித்து சிறுமிகள் அளித்த தகவலின் அடிப்படையில், அதிர்ச்சியடைந்த தாய் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் ராம்ராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்