Netflix பாஸ்வேர்ட் ஷேரிங்.. ஷாக் கொடுத்த நிறுவனம் - ஆனால் ஒரு குட் நியூஸ்

x

உலகம் முழுவதும் உள்ள மக்கள் தற்போது ஓடிடி தளங்களில் தங்களுடைய பொழுதுபோக்கு நேரங்களை பெரும்பாலும் செலவிட்டு வருகிறார்கள்.. ரசிகர்களை கவரும் படங்கள், வெப் சீரிஸ்கள் என அத்தனையும் இதுபோன்ற தளங்களில் கிடைப்பதே காரணம்... இந்தியாவில் மட்டும் 20 லட்சத்திற்கும் அதிகமான நெட்ஃபிளிக்ஸ் சந்தாதாரர்கள் உள்ளனர். Netflixல் மொபைல் Basic Standard பிரீமியம் என நான்கு பிளான்கள் உள்ளன ..மொபைல் சந்தாதாரர் என்றால் மாதத்திற்கு 149 ரூபாய், Basic சந்தாதாரர் என்றால் 199 ரூபாயும், ஸ்டாண்டர்ட் சந்தாதாரர் என்றால் 499 ரூபாயும், பிரீமியம் சந்தாதாரர் என்றால் 649 ரூபாயும் மாத தவணையாக செலுத்தி வருகிறார்கள். இதில் மொபைல் மற்றும் Basic பிளான் வைத்திருப்பவர்கள் ஒரே நேரத்தில் ஒரு டிவைஸில் மட்டுமே உபயோகிக்க முடியும்.. ஸ்டாண்டர்ட் பிளான் வைத்திருப்பவர்கள் இரண்டு டிவைசிலும் பிரீமியம் பிளான் வைத்திருப்பவர்கள் ஆறு டிவைசிலும் உபயோகிக்க முடியும்..

ஸ்டாண்டர்ட் பிளான் மற்றும் பிரீமியம் பிளான் வைத்திருப்பவர்கள் தங்களுடைய பாஸ்வேர்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்..இந்த முறையை பயன்படுத்தி பல்வேறு சந்தாதாரர்கள் தங்களுடைய குடும்பத்தினருக்கும் அல்லது நண்பர்களுக்கு பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்கிறார்கள்..ஆனால் இனிமேல் பாஸ்வேர்ட் பகிரும் சந்தாதாரர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று netflix நிறுவனம் தெரிவித்துள்ளது.. இந்த முறையானது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அமலுக்கு வந்துள்ளது.அதன்படி அமெரிக்காவில் ஸ்டாண்டர்ட் பிளான் வைத்திருப்பவர்கள் மாதத்திற்கு 1290 செலுத்தி வருகிறார்கள்.. தங்களுடைய பாஸ்வேர்டை ஷேர் செய்ய கூடுதலாக 661 ரூபாயை செலுத்த வேண்டும் என்று netflix நிறுவனம் தெரிவித்துள்ளது.. இதன் மூலம் ஒருவரிடம் தங்களுடைய பாஸ்வேர்டை ஷேர் செய்து கொள்ளலாம்... இதே போல பிரீமியம் பிளான் வைத்திருப்பவர்கள் கூடுதலாக 660 ரூபாய் செலுத்துவதன் மூலம் இரண்டு பேரிடம் தங்களுடைய பாஸ்வேர்டை ஷேர் செய்து கொள்ள முடியும்.

இங்கிலாந்தில் அந்த பிளான் வைத்திருப்பவர்கள் மாதம் 980 ரூபாய் செலுத்தக் கூடிய வேளையில் கூடுதலாக 510 செலுத்துவதன் மூலம் ஒரு நபரிடம் பாஸ்வேர்டை ஷேர் செய்து கொள்ளலாம் இதே விதி பிரீமியம் பிளான் வைத்திருப்பவர்களுக்கு பொருந்தும். ஒரே வேளை பாஸ்வேர்டு பகிர்வது தொடர்ந்தால் அக்கவுண்ட் பிளாக் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி மாத சந்தாவை செலுத்துவது போல் உள்ளதால் netflix பயனாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் தற்போது வரை இந்தியாவில் இந்த முறை அமலுக்கு வரவில்லை ஆனால் கூடிய விரைவில் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு...எனினும் இந்தியாவில் அதிக மக்கள் தொகை இருப்பதாலும் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அதிகம் இருப்பதாலும் netflix பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது...

இதனால் netflix நிறுவனம் தங்களுடைய சேவையை இந்தியாவில் இன்னும் அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. அதன்படி netflix ceo கடந்த பிப்ரவரியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்தபோது கூட இது தொடர்பாக பல்வேறு விஷயங்களை ஆலோசித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்