தேரோட்டத்துக்கு தயாராகும் நெல்லையப்பர் கோவில் தேர்
நெல்லை நெல்லையப்பர் கோயிலில் உள்ள தேர் ஆசியாவிலேயே அதிக எடை கொண்டது. தமிழகத்தில் மூன்றாவது உயரமான தேர் என்ற பெருமைக்கு உரியது. முழுக்க முழுக்க மனித சக்தியால் நெல்லையப்பர் தேர் இழுக்கப்பட்டு ரதவீதிகளில் சுற்றி மீண்டும் நிலையம் கொண்டுவந்து சேர்க்கப்படும். 480 டன் எடை கொண்ட இந்த தேர், 85 அடி உயரம் கொண்டது. தற்போது ஆனி தேரோட்டத்திற்காக தேரை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேக்கு மற்றும் கொங்கு மர தூண்களால் அமைக்கப்பட்டுள்ள இந்த தேரில் வண்ணம் பூசும் பணி, அலங்கார குதிரைகள், பொம்மைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கோயில் தலைமை மேஸ்திரி சங்கர் குடும்பத்தினர் பார்த்து வருகின்றனர். ஒரு வாரத்திற்குள் பணிகளை முடித்து தேரோட்டத்திற்கு தயார் படுத்துவதற்காக இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர்.
Next Story