கழுத்தறுபட்டு சடலமாக கிடந்த வாலிபர்... பழைய கொலைக்கு பழிதீர்த்த பயங்கரம்..?

x

கொலை வழக்குல ஆஜராக வந்த இளைஞர் கழுத்தறுத்து கொடூரமா கொல்லப்பட்டிருக்காரு... தம்பி கொலைக்கு பழி தீர்த்தாரா அண்ணன்?


நெல்லை புதிய பேருந்து நிலையம், துதியின் கோட்டை தேவாலயத்தின் பின்புறம் உள்ள சாலை அது.

வழக்கத்திற்கு மாறாக அன்று அங்கு போலீசார் குவிந்தனர்.

அங்கிருந்த கல்லறை தோட்டத்திற்குள் நுழைந்த போலீசார், பாழடைந்த அந்த கட்டத்துக்குள் கிடந்த இளைஞரின் சடலத்தை ஆய்வு செய்திருக்கிறார்கள்.

குறி பார்த்து கழுத்து வெட்டப்பட்டிருக்கிறது. கொடூரமான கொலை வெறி ஊறி போனவர்களால் தான் இப்படி ஒரு கொலையை செய்திருக்க முடியும்.

சடலத்தை கைபற்றிய போலீசார், உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.

கொல்லப்பட்டவர் கேடிசி நகர் பகுதியை சேர்ந்த ஜோஷ் செல்வராஜ். 34 வயதாகிறது. வேலை வெட்டிக்கு செல்லாமல் ஊருக்குள் வலம் வந்திருக்கிறார்.

இவரை போலவே வேலை இல்லாமல் ஊர் சுற்றி வந்த பாளையங்கோட்டை திருமால் நகரை சேர்ந்த முத்துஹரியோடு, ஜோஷ் செல்வராஜூக்கு நல்ல நட்பு இருந்திருக்கிறது. இருவரும் நெருங்கி பழகியிருக்கிறார்கள்.

இந்த சூழலில் முத்துஹரியின் பைக் காணாமல் போயிருக்கிறது. ஜோஷ் செல்வராஜ் மீது அவருக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது.

நண்பர்கள் அனைவரும் ஒரு நாள் மது அருந்திய போது நேரடியாகவே முத்துஹரி பைக் திருட்டை பற்றி ஜோஷ் செல்வராஜிடம் கேட்டிருக்கிறார்.

எல்லோர் முன்னிலையிலும் தன்னை திருடன் என்று கூறியதால் ஆத்திரமடைந்த ஜோஷ் செல்வராஜ் முத்துஹரியை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், ஜோஸ் செல்வராஜ் உட்பட 4 பேரை கைது செய்திருக்கிறார்கள்.

2022 ஆம் ஆண்டு நடந்த அந்த கொலை வழக்கு தொடர்பாக தான், தற்போது ஜோஷ் செல்வராஜூம் அவரது நண்பர்களும் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்திருக்கிறார்கள்.

கோர்ட் தொடர்பான வேலைகள் முடிந்ததும், நண்பர்கள் நால்வரும் கல்லரை தோட்டத்தில் இருந்த பாழடைந்த கட்டிடத்தில் மது குடித்திருக்கிறார்கள். அதன் தொடர்சியாக தான் ஜோஷ் செல்வராஜ் கொடூரமக கொல்லப்பட்டிருக்கிறார்.

அவருடன் மது அருந்திய மூவரும் திடிரென தலைமறைவாகியிருக்கிறார்கள்.


அந்த கும்பலில் முத்து ஹரியின் அண்ணனும் இருந்ததாக சொல்லப்படுகிறது. தம்பியின் கொலைக்கு அவர் பழிவாங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மூவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். முழு விசாரணைக்கு பிறகே ஜோஷ் செல்வராஜை கொன்றது யார் என்று தெரியவரும்.


Next Story

மேலும் செய்திகள்