கோயில் நகைகளை திருடி கவரிங் நகைகளை சாமிக்கு போட்ட பூசாரி - நெல்லையில் பரபரப்பு
- நெல்லையில் கோவில் நகைகளை திருடிவிட்டு, கவுரிங் நகைகளை சாமிக்கு மாட்டி விட்ட கோவில் பூசாரியை போலீசார் கைது செய்தனர்.
- நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள "முதுமொத்தன் மொழி"முத்தாரம்மன் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வந்தவர் மகேஷ். இவர் கோவிலுக்கு நேர்த்திகடனான வழங்கப்பட்ட நகைகளை திருடி, போலி நகைகளை சாமிக்கு மாட்டி விட்டதாக கூறப்படுகிறது.
- இந்நிலையில், கோவில் நிர்வாகம் நகைகளை சர்பார்த்த போது, பல நகைகள் போலியானது என்பது தெரியவந்துள்ளது.
- இதையடுத்து, கோவில் நிர்வாகத்தினர் போலீசில் புகாரளித்த நிலையில், தலைமறைவாக இருந்த பூசார் மகேஷை போலீசார் தேடு வந்தனர்.
- இந்நிலையில், நாகர்கோவிலுக்கு தப்பி செல்ல முயன்ற மகேஷை நலந்துலா கிராமத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
- இதில், பூசாரி மகேஷிடம் இருந்து எட்டரை சவரன் நகைகளை கைப்பற்றிய போலீசார், மகேஷை சிறையில் அடைத்தனர்.
Next Story