அம்மா வேலை செய்யும் வீட்டை பல நாள் நோட்டமிட்ட சிறுவன்... தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்

x

நெல்லையில் இரு சக்கர வாகனம் வாங்குவதற்காக மூதாட்டியை கொன்று, 11 சவரன் நகைகள் திருடப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே பத்திநாதபுரத்தை சேர்ந்த மூதாட்டி உஷா தேவி. இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் மர்மமான முறையின் உயிரிழந்து கிடந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், மூதாட்டியின் வீட்டில் இருந்த நகைகளும், மூதாட்டி அணிந்திருந்த நகைகளும் மாயமானது தெரியவந்தது. விசாரணையில், மூதாட்டியின் வீட்டில் பணிபுரிந்து வந்த ஜெயா என்பவரின் மகனான இளஞ்சிறுவன், இரு சக்கர வாகனம் வாங்குவதற்காக மூதாட்டியை கொன்று நகைகளை திருடியது அம்பலமானது. இதனையடுத்து, இளஞ்சிறார் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார், திருடு போன நகைகளை மீட்டு வந்தனர். இந்நிலையில், தலைமறைவான இளஞ்சிறாரின் தாய் ஜெயா மற்றும் ஜோடன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இளஞ்சிறாரின் சகோதரனை போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்