நெல்லை அரசு மருத்துவமனையில் தொடர் திருட்டு - அதிகாரிகள் அதிரடி சோதனை
நெல்லை அரசு மருத்துவமனையில் நடைபெறும் தொடர் திருட்டை தடுக்கும் வகையில் நெல்லை மாநகர துணை காவல் ஆணையாளர் அனைத்து வார்டுகளிலும் அதிரடி சோதனை நடத்தினார்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செல்போன்கள், இரு சக்கர வாகனங்கள் காணாமல் போவதாக நெல்லை மாநகர காவல் துறைக்கு தொடர் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சீனிவாசன் தலைமையிலான 50 - க்கும் மேற்பட்ட போலீசார் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உதவியாளர்கள் தவிர்த்து சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த 30-க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
Next Story