பாட்டிகளின் காதுகளை அலங்கரித்த பாம்படம்... கௌரவப்படுத்திய நெல்லை மாநகராட்சி

x
  • ஒரு காலத்தில் பாட்டிகளின் காதுகளை அலங்கரித்து காலப்போக்கில் மறைந்துபோன பாம்படத்திற்கு நெல்லையில் சிலை வைத்து கெளரவம் செய்யப்பட்டுள்ளது.
  • நெல்லை மாநகராட்சியில், டவுன் எஸ்.என். ஹைரோட்டில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 56 புள்ளி 71 கோடி ரூபாய் செலவில் வர்த்தக மையம் கட்டப்பட்டு வருகிறது.
  • அரசு, தனியார் நிறுவன கருத்தரங்குகள், உணவுக் கண்காட்சி, புத்தக திருவிழா, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்துவதற்கு 2 பெரிய அரங்குகள் என 95 சதவீத கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், நவீன தொழில்நுட்பத்தில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு வருகிறது.
  • அதனருகில் 10 லட்ச ரூபாய் செலவில் பாம்படம் சிலை வைக்கப்பட்டுள்ளது.
  • தென்தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வயது முதிர்ந்த பெண்கள் அணிந்து வந்த அந்த காதணியை தற்போதைய தலைமுறையினரும் தெரிந்துகொள்ளும் அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது.
  • அந்த சிலை அனைவரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்