"மாநில உரிமையை பறிக்கிறது நீட்தேர்வு" - ஆளுநர் உரை

x

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநர் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையில், மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஏ.கே.ராஜன் குழு பரிந்துரை அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது, உடனடியாக நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கிராமப்புற மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்கு புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசின் இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக உள்ளதாக ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்