நீட் தேர்வு குளறுபடி விவகாரம் - ஓஎம்ஆர் சீட்டின் கார்பன் நகல் எங்கே? - நீதிமன்றம் சரமாரி கேள்வி

x

நீட் தேர்வு முகமை இளையதளத்தில் வெளியீட்டுள்ள OMR விடை தாள் தன்னுடையது அல்ல என திருநெல்வேலியை சேர்ந்த எவல்ட் டேவிட் தாக்கல் செய்த மனு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது நீட் தேர்வு முகமை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவன் எழுதிய நுழைவு தேர்வின் ஓஎம்ஆர் விடைத்தாளை தாக்கல் செய்தார். அப்போது, ஓஎம்ஆர் சீட்டின் கார்பன் நகலை ஏன் தாக்கல் செய்யப்படவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் ஓஎம்ஆர் சீட்டின் கார்பன் நகலை வரும் வெள்ளி கிழமை அவசியம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிபதி விசாரணையை ஒத்தி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்