"நயன், விக்கியை நேரில் அழைத்து விசாரணை நடத்தப்படும்" - விளக்கம் அளித்த தமிழக சுகாதாரத்துறை
"நயன், விக்கியை நேரில் அழைத்து விசாரணை நடத்தப்படும்" - விளக்கம் அளித்த தமிழக சுகாதாரத்துறை
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரத்தில் தமிழக சுகாதாரத்துறையை சேர்ந்த மூன்று பேர் கொண்ட குழு, நயன்தாரா - விக்னேஷ் சிவனிடம் நேரில் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக, பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் என்றார். இதனிடையே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் 6 வருடங்களுக்கு முன்பாகவே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், சட்டம் அமல்படுத்துவதற்கு முன்பே, வாடகைத்தாய் ஒப்பந்தம் செய்து கொண்டதால் தற்போதுள்ள நடைமுறை தங்களை கட்டுப்படுத்தாது எனவும் நயன்தாரா தரப்பு கூறியதாக தகவல்கள் வெளியானது.
இந்த சூழலில் நயன்தாரா தரப்பு தங்களுக்கு எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பதிவு திருமணம் தொடர்பான ஆவணங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் வாடகை தாய் குறித்து கண்டறியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சுகாதாரத் துறையைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழு விரைவில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை நேரில் அழைத்து விசாரணை நடத்த உள்ளதாகவும் சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.