68-வது தேசிய விருதுகள் அறிவிப்பு.. 5 தேசிய விருதுகளை தட்டி தூக்கிய சூரரைப்போற்று - வாழ்த்து சொன்ன முதலமைச்சர்

68-வது தேசிய விருதுகள் அறிவிப்பு.. 5 தேசிய விருதுகளை தட்டி தூக்கிய சூரரைப்போற்று - வாழ்த்து சொன்ன முதலமைச்சர்
x

விருதுகளை குவித்த தமிழ்த் திரையுலகினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டர் பதிவிட்டுள்ள அவர், விருதுகளைக் குவித்து தமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்த்துள்ள சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி. பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட சூரரைப் போற்று படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இயக்குநர் வசந்த், லட்சுமி பிரியா சந்திரமவுலி, ஸ்ரீகர் பிரசாத் மற்றும் மடோன் அஸ்வின், யோகிபாபு உள்ளிட்ட மண்டேலா படக்குழுவினருக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துள்ள முதலமைச்சர் சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் என குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்