வெட்டி கொலை செய்யப்பட்ட ரவுடியின் இறுதி ஊர்வலத்தில் வெடித்த கலவரம்...கடைகளை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு
- வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட ரவுடியின் இறுதி ஊர்வலத்தில் கலவரத்தில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது...
- வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளரும் ரவுடியுமான திருவாரூர் பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் நேற்று முன்தினம் கமலாபுரத்தில் 8 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கொலை நடந்த 12 மணி நேரத்தில் காவல் துறையினர் 5 முக்கிய கொலை குற்றவாளிகளை கைது செய்தனர்.
- ராஜ்குமாரின் உடலை அமரர் ஊர்தியில் வைத்து வளரும் தமிழகம் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் ஊர்வலம் சென்றனர்.
- அத்துடன் அவரது சொந்த ஊரான நீடாமங்கலத்தில் ராஜ்குமார் உடலை வைத்து அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், அப்பகுதியில் இருந்த கடைகளை அடித்து நொறுக்கினர்...
- வாகனங்களைத் தாக்கினர்... கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்...
- இந்நிலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வளரும் தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் பாலை பட்டாபிராமன் உள்ளிட்ட 30 பேர் மீதும், கலவரத்தில் ஈடுபட்டதாக 10 பேர் மீதும் காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story