உதவி கேட்டு சென்ற இடத்தில் போலீசும் தரக்குறைவாக பேசியுள்ளனர்? - வேதனையில் கண்கலங்கி நின்ற பாட்டி

x
  • நாமக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்திற்கு உதவி கேட்டு வந்த மூதாட்டியை காவலர்கள் வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • பள்ளிபாளையம், கண்டிப்புதூரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி அய்யம்மாளின் கணவரும், 2 மகன்களும் இறந்து விட்டதால், மருமகள்களின் ஆதரவில் வாழ்ந்து வருகிறார்.
  • கடந்த சில ஆண்டுகளாக மருமகள்கள் சரிவர கவனிப்பதில்லை என்று கூறப்படுகிறது.
  • இதுதொடர்பாக, பள்ளிப்பாளையம் காவல்நிலையத்தில் மூதாட்டி அவ்வப்போது புகார் தெரிவித்து வந்துள்ளார். அவரை போலீசார் பேசி சமாளித்து அனுப்பி வந்துள்ளனர்.
  • இந்நிலையில், வழக்கம்போல் புகார் தெரிவிக்க வந்த அய்யம்மாளை, காவலர் ஒருவர் தரக்குறைவாக பேசியதுடன், காவல் நிலையத்தில் இருந்து வெளியேறுமாறு, தள்ளிவிட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
  • இதனால் வேதனை அடைந்த மூதாட்டி கண்கலங்கியுள்ளார்.
  • முதியோர் உதவித்தொகை மூலம் வாழ்ந்து வரும் அவரிடம் காவலர்கள் நடந்து கொள்ளும் விதம் அதிர்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்