நாமக்கல்லில் சுற்றி திரியும் சிறுத்தை - மக்களுக்கு அமைச்சர் மதிவேந்தன் எச்சரிக்கை

x

நாமக்கல் மாவட்டம் இருக்கூர் பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டுள்ள நிலையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அலுவலரிடம் சிறுத்தை நடமாட்டம், சிறுத்தையை பிடிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர் விரிவாக கேட்டறிந்தார்.

மேலும் கண்காணிப்பு கேமராக்கள், சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டுள்ள கூண்டை பார்வையிட்ட அமைச்சர், சிறுத்தையை பிடிக்கும் வரை பொதுமக்கள் மிகுந்த எச்சரிகையுடன் இருக்குமாறு அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்