ஒரே ஒரு மெசேஜ்... ரூ.1 லட்சம் குளோஸ்... - நடிகை நக்மாவின் பணத்தை அபேஸ் செய்த கும்பல்

x
  • வங்கி அதிகாரிபோல போனில் பேசி, நடிகை நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை மர்ம நபர் கொள்ளையடித்துள்ளார்.
  • இந்திய திரையுலகின் பிரபல நடிகையான நக்மா, தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்.
  • இவரது செல்போனுக்கு சமீபத்தில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இருந்த 'லிங்க்'ஐ நடிகை நக்மா 'கிளிக்' செய்த உடன், மர்ம நபர் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு, தன்னை வங்கி அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
  • அந்த நபர் நக்மாவின் கே.ஒய்.சி. விவரங்களை புதுப்பிக்க உதவுவதாக கூறியுள்ளார்.
  • சிறிது நேரத்தில் நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து 99 ஆயிரத்து 998 ரூபாய் திருடப்பட்டுள்ளது.
  • இதனால் அதிர்ச்சி அடைந்த நக்மா, மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்