நாகூர் தர்கா கந்தூரி விழா.. வானவேடிக்கையுடன் தொடங்கிய கொடியேற்றம்..
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்காவின் 466ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, முதுபக்கு எனும் சிறப்புக் கொடியை எடுத்து வரும் கப்பல் வடிவரதம், செட்டிபல்லக்கு, சாம்பிராணி சட்டி போன்ற ரதங்கள் ஊர்வலமாக நாகையிலிருந்து நாகூர் வந்தடைந்தன. இதைத் தொடர்ந்து, நாகூர் தர்கா பரம்பரை ஆதீனம் கலிபா மஸ்தான் சாகிபு, கொடிக்கு தூ-வா ஓத, வாண வேடிக்கை முழங்க தர்காவில் கொடியேற்றப்பட்டது. இதில், இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
Next Story