உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் கந்தூரி விழா... 2 மணி நேரம் தாமதமாக ஏற்றப்பட்ட பாய்மரம்-காரணம் என்ன?
புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 466ம் ஆண்டு கந்தூரி விழா வரும் 24ம் தேதி கோலாகலமாகத் துவங்க உள்ள நிலையில், இன்று அதிகாலை பாய்மரம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக ஆண்டவர் தர்காவில் சிறப்பு துவா ஓதப்பட்டது. அதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுகள் முழங்க தர்காவின் உள்ளே உள்ள மினாராவில் கொடிமரம் ஏற்றப்பட்டது. அப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை சிறப்பிக்கும் விதமாக அனைவருக்கும் சீனி மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். தொடர்ந்து பெரிய மினாராவில் பாய்மரம் ஏற்றும் நிகழ்வின் போது கயிறு அறுந்ததால், சரி செய்யப்பட்டு 2 மணி நேரத் தாமதத்திற்குப் பின் மீண்டும் பாய்மரம் ஏற்றப்பட்டது.
Next Story