நடுக்கடலில் கை வெட்டப்பட்ட தமிழக மீனவர் - கரை சேர்ந்ததும் கதறி அழுத மனைவி - கோடியக்கரை அருகே நடந்த பயங்கரம்

x
  • நாகை மாவட்டம், நம்பியார் நகரைச் சேர்ந்த 7 பேர், கடந்த 14-ஆம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
  • இரவு நேரத்தில் கோடியக்கரை அருகே இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, 4 படகுகளில் அதிவேகமாக வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்களை கூர்மையான கத்தியால் தாக்கியுள்ளனர்.
  • பின்னர், படகில் இருந்த மீன், ஜிபிஎஸ் கருவி, வலைகள் என 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
  • காயமடைந்த மீனவர்கள், மற்ற மீனவர்களின் உதவியுடன் கரைக்கு வந்து, அங்கிருந்து நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.
  • அவர்களில், மீனவர் முருகனுக்கு மூன்று விரல்கள் வெட்டுப்பட்டதால், கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்