உறவினருடன் சொத்து தகராறு.. திமுக பிரமுகர் மகனுக்கு கத்தி குத்து! - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x
  • நாகையில் முன்னாள் திமுக நகர செயலாளர் மகனை, அவரது உறவினர் ஒருவர் வீடு புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
  • நாகை, வெளிப்பாளையம் முகமதியார் தெருவை சேர்ந்தவர் முன்னாள் திமுக நகர செயலாளர் பன்னீர்.
  • இவருடைய மகன் தயாளன் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
  • தயாளனுக்கும், அவரது உறவினரான சரவணனுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில் தயாளன் வீட்டில் நண்பர்களுடன் பேசி கொண்டிருக்கையில் அங்கு தனது கூட்டாளியுடன் வந்த சரவணன் மீண்டும் சொத்து குறித்து தயாளனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
  • ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை கொண்டு தயாளனையும், அவருடைய நண்பரையும் குத்தி விட்டு தப்பியோடியுள்ளார்.
  • இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • மேலும் தாக்குதலில் ஈடுபட்ட சரவணன் மற்றும் அவருடைய கூட்டாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்