திடீரென வீட்டிற்குள் குதித்த மர்ம நபர்கள்... துணிந்து சண்டையிட்ட ஒற்றை பெண்....கொள்ளையனை காட்டிக்கொடுத்த கடிபட்ட விரல்

x

திருவள்ளூர் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 16 சவரன் நகை திருடப்பட்ட வழக்கில், பெண் அளித்த தகவலின் அடிப்படையில் கொள்ளையர்கள் போலீசில் சிக்கியுள்ளனர்.

பெரியபாளையம் அடுத்த மல்லியங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மாலதி. இவரது கணவர் மற்றும் பிள்ளைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் புகுந்த மர்மநபர்கள், மாலதியை துணியால் கட்டி வைத்து மிரட்டியுள்ளனர். தொடர்ந்து, பணம் மற்றும் நகைகள் இருக்கும் இடத்தை கேட்டு அரிவாளால் பெண்ணை தாக்கிய நிலையில், 18 சவரன் நகை மற்றும் 1 லட்ச ரூபாய்க்கு மேல் பணத்தினை வீட்டில் இருந்து திருடி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், அருகில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொள்ளையர் ஒருவரின் கை விரலை பெண் கடித்ததாக வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், அந்த இளைஞரின் கை விரலிலும் காயங்கள் இருந்ததால் போலீசாரின் சந்தேகம் உறுதியானது. இதையடுத்து, அருகில் உள்ள ஏரியில் மூட்டையாக கட்டி வீசப்பட்ட 16 சவரன் நகை மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த அருண்குமார் மற்றும் மங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெய்பீம் ஆகிய இருவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்