நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிய மர்ம நபர்கள்.. என்ன காரணம்...? அச்சத்தில் பொதுமக்கள்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மங்கா குளத்தெருவில், 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. இந்தநிலையில் அத்தொட்டியில் ஏறிய மர்மநபர்கள், தொட்டியிலிருந்த இருந்த தேன் கூட்டிலிருந்து தேனை எடுக்க முயன்றதாகவும், இதற்காக 1 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த பேரூராட்சி நிர்வாகத்தினருக்கு, மர்ம நபர்கள் நீர்த்தேக்க தொட்டியில் வேறு ஏதேனும் கலந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து 3 லட்சம் லிட்டர் தண்ணீரையும் வெளியேற்றி, அதனை சுத்தம் செய்தனர். மேலும் தொட்டியிலிருந்த நீரின் மாதிரியை பரிசோதைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story