ரயில்களுக்கு தீ வைக்கும் மர்ம நபர்கள்... அதிர்ச்சியில் மிரண்டு போயிருக்கும் பயணிகள்...

x

சமீபத்துல நடந்த கேரளா ரயில் எரிப்பு சம்பவம் நம்ம எல்லாரையும் குலை நடுங்க வைச்சது... அந்த பதைபதைப்பே இன்னும் மனசவிட்டு போகாத நிலையில மறுபடியும் அதே ரயில் தீ பற்றி எரிஞ்சிருக்கு… ட்ரெயினுக்கு தீ வைச்சது தீவிரவாதியா தேச துரோகியா?

இங்கு, தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பது வெறும் ரயில் பெட்டிகள் என்று மட்டும் இந்த சம்பவத்தை கடந்து விட முடியாது.

சென்ற ஏப்ரல் மாதம் இதே ட்ரயினில் நடந்த ஒரு கோர சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். பல பயணிகள் படுகாயமடைந்தனர்.

அந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் தற்போது மீண்டும் ஒரு ரயில் எரிப்பு சம்பவம் நடந்திருப்பது அனைவரையும் அதிரவைத்திருக்கிறது.

மக்களின் உயிரையும், அரசின் உடமைகளையும் துச்சமென கருதும் அந்த நடுநிசி மர்ம நபர்கள் யார் ?கேரளாவில் இரண்டாவது முறையாக நடந்திருக்கும் இந்த ரயில் எரிப்பு சம்பவம் யாருக்கான அபாய மணி ?

சமூகத்தில் ஸ்லீப்பர் செல்லாக ஊடுறுவியுள்ள நெட்வொர்கின் டார்கெட் என்ன போன்ற பல கேள்விகளோடு விசாரணையை தொடங்கினோம்...


ஷாருக் சைபி ( shahrukh saifi ) இந்த பெயரை, நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. எலத்தூர் ரயில் எரிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர்.

டெல்லி நொய்டா பகுதியை சேர்ந்த ஷாருக் சைபி கேரளாவிற்கு வந்தது அதுவே முதல் முறை என சொல்லப்பட்டது.

கைதான ஷாருக் சைபியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவருக்கு கார்பெண்டர், யூடிப்பர் போன்ற பல அடையாளங்கள் இருந்ததும் தெரியவந்தது.

அதோட அவர் வைத்திருந்த டைரியில் கன்னியாகுமரி, குளச்சல் போன்ற தமிழக நகரங்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது பல சந்தேகங்களுக்கு வழிவகுத்தது.

காவல்துறையிடமிருந்து இந்த வழக்கை கையிலெடுத்த NIA அதிகாரிகள், கோவை கார் குண்டு வெடிப்போடும், மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தோடும் இணைத்து பல கோணங்களில் விசாரணை செய்தனர்.

எலத்தூர் ரயில் எரிப்பு சம்பவத்தின் போது ஷாருக் சைபியிடமிருந்து போலியான ஐடியில் நான்கு சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு, ரயில் எரிப்பு சம்பவத்தில் ஈடுபடுவற்கு முன் அவருக்கு யாரோ டிபன் பாக்ஸில் உணவு தயாரித்து கொடுத்துள்ளதாகவும் சொல்லப்பட்டது. கண்ணூர் ரயில் நிலையத்திலிருந்து தப்பிச்செல்லும் போது ஒரு உடையிலும், அவரை கைதாகும் போது மற்றொரு உடையிலும் இருந்தது நிச்சயமாக ஷாருக் சைபிக்கு பின்னால் ஒரு குழு செயல்படுவதாகவே எண்ண தோன்றியது.

ஷாருக் சைபியிடம் நடந்த விசாரணையில் அவருக்கு கேரளாவில் உதவியவர் யார்? நடந்த தாக்குதலுக்கான காரணம் என்ன ? போன்ற பல கேள்விகளுக்கு இன்றளவும் விடைக்கிடைக்காமல் மர்மமாகவே உள்ளது.

இந்த சுழலில் தான், கேரளா கண்ணூர் ரயில் நிலையத்தில் வழக்கமான சர்வீஸ் முடிந்து பயணிகளுக்காக தயாராகி கொண்டிருந்த ஆலப்புழா - கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் திடீரென தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்திருக்கிறது.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

ஆனால் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நடந்த சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உடனடியாக ரயில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது பதிவான சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்துள்ளனர். அதில், மர்ம நபர் ஒருவர் கையில் பெட்ரோல் கேணோடு ரயிலில் இறங்கி தப்பி ஓடுவது பதிவாகி இருக்கிறது.

சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை கொண்டு மேற்கொண்ட விசாரணையில், மர்ம நபர் ரயில் பெட்டியின் கழிவறை கண்ணாடியை உடைத்து, அதனுள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

எண்ணூர் சுற்றியுள்ள செக்போஸ்டில் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்தி ரயிலுக்கு தீவைத்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த எலத்தூர் ரயில் எரிப்பு சம்பவத்திற்கும், கண்ணூர் ரயில் எரிப்பு சம்பவத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்திலும், ஷாருக் சைபிக்கும் தற்போது ரயிலுக்கு தீ வைத்தவருக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்கிற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

சமூகத்தில் ஸ்லீப்பர் செல்லாக ஊடுறுவி இத்தகைய நாச வேளைகளில் ஈடுபடுபவர்களால், ரயில் பயணிகளின் பாதுக்காப்பு தற்போது கேள்வி குறி ஆகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்