இரவோடு இரவாக VAO காருக்கு தீ வைத்த மர்ம கும்பல் - முற்றிலும் கருகி நாசமான முன்புறம் - நாகையில் பரபரப்பு சம்பவம்

x

நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி பகுதியை சேர்ந்த செல்வமணி வருவாய்த்துறையில் வடகுடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல தனக்கு சொந்தமான காரை பட்டினச்சேரி புயல் பாதுகாப்பு மையம் அருகே நிறுத்தி வைத்துள்ளார். அப்போது நேற்று நள்ளிரவு 1 மணியளவில் காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பியோடி உள்ளனர். கார் பற்றி எரிந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், தண்ணீர் ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் காரின் முன்பகுதி முற்றிலுமாக எரிந்து சேதமானது. முன் விரோதம் காரணமாக கார் தீ வைக்கப்பட்டு இருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கார் எரிக்கப்பட்ட இடத்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குவிந்த நிலையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்