முதியவர்களை வெளியே தள்ளி தீ வைத்த மர்ம கும்பல் - பற்றியெரிந்த வீடு... அதிர வைக்கும் சம்பவம்

x

பழனி அருகே முதியவர்களை வெளியே தள்ளிய மர்ம நபர்கள், முதியவர்களின் வீட்டிற்கு தீ வைத்துள்ளனர்.

பழனி அருகே முருகன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில், செல்லமுத்து என்பவர் கடந்த 50 ஆண்டுகளாக காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது 80 வயதாகும் செல்லமுத்துவை, முருகனின் மனைவி தொடர்ந்து வெளியேறக் கூறி வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக செல்லமுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தோட்டத்திற்கு புகுந்த மர்ம நபர்கள், செல்ல முத்து மற்றும் அவரது மனைவியை வெளியே இழுத்து தள்ளியபின், அவர்கள் குடியிருந்த குடிசை வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் காயமடைந்த முதியவர் செல்லமுத்து, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்