ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே கிடந்த மர்ம பெட்டி - ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு
ஸ்ரீபெரும்புதூரில், ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு நிலவியது. காரில் வந்த நபர்கள், பெட்டி ஒன்றை ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே வீசிச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் உள்ளிட்டோர் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில், பெட்டியில் ஒன்றும் இல்லாததால் போலீசார் கலந்து சென்றனர்.
Next Story