"என் மகனை அடிச்சே கொன்னுட்டாங்க"... சிறையில் இறந்த இளைஞரின் உடலில் காயங்கள் - வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சிறையில் உயிரிழந்த இளைஞரின் உடலில் காயங்கள் இருப்பதாக உடற்கூறு ஆய்வறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன்கோவிலை அடுத்த புளியங்குடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தங்கசாமி, மது விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக போலீசார் அழைத்துச் சென்றனர். பாளை மத்திய சிறையில் இருந்த அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்தது விட்டதாக புளியங்குடி காவல் துறையினருக்கு சில நாட்களுக்கு முன்பு சிறை நிர்வாகம் தகவல் அளித்துது. இதையடுத்து, அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இநிநலையில், அவருடைய உடலில் காயங்கள் இருப்பதாக உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், காவல் துறையினர் தாக்கியதன் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.