“என் புள்ள சாதிக்கனும்.. என் லட்சியமே அதான்..““என் பையனுக்கு கை கிடைக்க உதவ வேண்டும்" - மாணவரின் தாய் கோரிக்கை

x

வேப்பனப்பள்ளி அருகே 2 கைகளை இழந்த சிறுவன், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் எடுத்து, பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி - அருள்மூர்த்தி தம்பதியின் மகன் க்ரித்தி வர்மா. இவர், நான்கு வயது இருக்கும்போது, வீட்டு மாடியை ஒட்டிய மின்கம்பியை தெரியாமல் பிடித்த‌தால், மின்சாரம் தாக்கி 2 கைகளையும் இழந்தார். மகனின் நிலையை கண்ட தந்தை அருள்மூர்த்தி, வீட்டைவிட்டு சென்ற நிலையில், தாய் கஸ்தூரியின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார். வேப்பனப்பள்ளி அருகே ஜீனூர் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு தாயுடன் சென்ற க்ரித்தி வர்மா, நன்றாக படித்து தன்னுடைய வேலைகளை தானே செய்தல், ஓவியம் வரைதல் என தன்னம்பிக்கையுடன் வளர்ந்துள்ளார். இதைப் பார்த்த ஆனந்தி என்ற ஆசிரியர், க்ரித்தி வர்மாவை நெடுமருதி மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து உதவிகளை செய்துள்ளார். இந்நிலையில் இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், க்ரித்தி வர்மா 437 மதிப்பெண்களை எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்