"என் மகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வந்துள்ளதாக போன் வந்துச்சு.." மாணவிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக கூறி, ஜிபே மூலம் 18 ஆயிரம் ரூபாய் வரை மோசடி நடந்தது குறித்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டி அடுத்துள்ள மாளிகைமேடு கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஒருவரை, செல்போன் மூலம் ஒருவர் தொடர்பு கொண்டார். உங்களது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளதாகவும், அதனை பெற்றுத்தர வங்கிக்கணக்கில் 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை இருப்பு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய பள்ளி மாணவிகள் 3 பேர், சக மாணவியின் செல்போனில் இருந்து ஜிபே மூலம் ஆன்லைனில் பணத்தை செலுத்தியுள்ளனர். பணம் செலுத்திய பின்னர், சம்பந்தப்பட்ட நபரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அழைப்பை துண்டித்துள்ளார். இதேபோல் மேலும் ஒரு மாணவி 8 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளார். இந்த ஆன்லைன் மோசடி குறித்து, பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்