சாய்பாபாவிற்கு சந்தன காப்பு அலங்காரம் செய்த இஸ்லாமியர்கள்

x

ராமநவமி மற்றும் சந்தனக்கூடு விழா மத நல்லிணக்கத் திருவிழாவாக ஈரோடு கருங்கல்பாளையம் சீரடி சாய்பாபா கோயிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது...

அங்கு அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோயிலில் பல்லக்கு சேவை சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது... 54 கலசங்களில் சந்தனத்தை ஏந்தியபடி பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்... தொடர்ந்து இஸ்லாமிய பெண்கள் குர் ஆன் ஓதி பாத்தியா அளித்தனர். அதன் பிறகு சாய்பாபாவிற்கு சந்தன காப்பு அலங்காரமும், சந்தன அபிஷேகமும் இஸ்லாமியர்களால் செய்யப்பட்டது. தொடர்ந்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் சாய்பாபா சிலைக்கு சந்தன அபிஷேகம் செய்தனர்.

நிகழ்வில் பங்கேற்ற இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க 3 கிலோ அரிசி வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்