மத நல்லிணக்க பொங்கல் விழா... ஜவுளி சுமந்து வந்து இஸ்லாமியர்கள் வழிபாடு
மத நல்லிணக்க பொங்கல் விழா... ஜவுளி சுமந்து வந்து இஸ்லாமியர்கள் வழிபாடு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைபட்டியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மத நல்லிணக்க பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள், ஜவுளி சுமந்து வந்து கோயிலில் வழிபாடு நடத்தினர். பாரம்பரிய முறைப்படி தை மாட்டுப் பொங்கலன்று, காளைகளுக்கு அணிவிக்கப்படும் வேட்டி, துண்டுகளை பொட்டலமாக கட்டி வீட்டிலிருந்து தலையில் சுமந்து ஊர் மந்தையில் வைக்கின்றனர். பின்னர் கொம்பு, மேளம் வாத்தியங்களுடன் வீர காளியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துகின்றனர். அங்கு ஜவுளி பொட்டலத்திற்கு ஆரத்தி வழிபாடு செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து துண்டுகள் கோவில் காளைகளுக்கு அணிவிக்கப்பட்டு மஞ்சு விரட்டு விழா அதிவிமர்சையாக நடைபெறுகிறது.
Next Story