கதாநாயகனாக களம் இறங்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்?

x

ரசிகரின் விருப்பத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜயின் 'பிகில்' படத்தில் இடம்பெற்ற 'சிங்கப்பெண்ணே...' பாடலில் தோன்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' ஆந்தம் வெளியாகி வைரலாகி வரும் சூழலில், அதில் ஏ.ஆர்.ரஹ்மானின் லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர் ஒருவர் "இசை உலகை ஆண்டதுபோதும்... திரையுலகை ஆளவா தலைவா..." என தெரிவித்துள்ளார். இதை ரீட்வீட் செய்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், சிரிக்கும் இமோஜியை பதிவிட்டுள்ளார்.




Next Story

மேலும் செய்திகள்