சிறையில் சாப்பிடாமல், யாருடனும் பேசாமல் முருகன் ஜீவசமாதி அறநிலை போராட்டம் - வழக்கறிஞர் தகவல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தன் மீதான வழக்கை விரைந்து முடித்து, பரோல் வழங்க வேண்டும் என, கடந்த 8 ஆம் தேதி முதல் முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் முருகனை, அவரது வழக்கறிஞர் புகழேந்தி நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் கூறுகையில், முருகன் சாப்பிடாமல் யாருடனும் பேசாமல் ஜீவசமாதி அறநிலை போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
தன்னை விடுதலை செய்ய சிறை அதிகாரிகளுக்கு விருப்பம் இல்லை.
விடுதலைக்காக போராட உடலிலும், மனதிலும் சக்தி இல்லை என்று முருகன் எழுத்து மூலம் தெரிவித்ததாகவும் கூறினார்.
Next Story