ரத்தம் தெறிக்க தெறிக்க.. கொலை வெறி தாக்குதல் - பாஜக நிர்வாகியின் பகீர் செயல்

x

திருப்பூரில் முன் விரோதம் காரணமாக இந்து முன்னணி நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த இந்து முன்னணி ஒன்றிய குழு பொதுச்செயலாளர் ராஜசேகர். இவர் கடந்த விநாயகர் சதுர்த்தியின் போது நன்கொடை கேட்டு, அப்பகுதியில் வசித்து வரும் பல்லடம் பாஜக தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் குருமூர்த்தியின் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது குருமூர்த்தி பணம் தர மறுக்கவே இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ராஜசேகர், குருமூர்த்தியை தாக்கியுள்ளார். இது குறித்து குருமூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் பல்லடம் போலீசார் ராஜசேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். இருப்பினும் ஆத்திரம் தீராத குருமூர்த்தி தன் நண்பர்கள் 10 பேர் கொண்ட கும்பலுடன் சென்று ராஜசேகர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், அப்பகுதி மக்கள் ராஜசேகரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்த போலீசார், தலைமறைவான அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்