உத்தரகாண்டை உலுக்கிய கொலை - பாஜக நிர்வாகி மகனின் கொடுமைகள் - அதிர வைக்கும் வாட்ஸ்ஆப் தகவல்கள்...!
உத்தரகாண்டில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் வாட்சப் உரையாடலை வைத்து சிறப்பு விசாரணை குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.
பாஜகவின் முன்னாள் அமைச்சர் வினோத் ஆரியாவின் மகன் புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமான ரெசார்ட்டில் அங்கிதா என்ற பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். ரெசார்ட்டிற்கு வரும் விருந்தாளர்களின் பாலியல் தேவைக்கு இணங்க அங்கிதா மறுத்ததால் அவர் படுகொலை செய்யபட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் ரெசார்ட் உரிமையாளர் புல்கித் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மரணம் தொடர்பாக அங்கிதாவின் வாட்சப்
உரையாடல்களை வைத்து விசாரித்து வருவதாக சிறப்பு விசாரணை குழு
தெரிவித்துள்ளது. விருந்தாளருக்கு இணங்கினால் 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுப்பதாக கூறியதாகவும், தன்னை வற்புறுத்துவதாகவும் கூறும் அங்கிதாவின் உரையாடல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, அங்கிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு பத்ரிநாத் மற்றும் ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் போராட்டம் நடைபெற்றது. மருத்துவமனைக்கு முன்பு ஏராளமானோர் குவிந்ததால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.