நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் கொடூர கொலை.."கொலைக்கு பழிதீர்ப்போம்" - இன்ஸ்டாவில் பதிவு

x
  • கோவையில் நீதிமன்ற வளாகம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சம்பவத்திற்கு முன்பாகவே இளைஞரை பழிதீர்ப்போம் என இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பதிவிட்டு வந்தது தெரியவந்துள்ளது.
  • கோவை நீதிமன்ற வளாகத்தில் கோகுல் என்ற இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • இந்த சம்பவம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்ரீராம் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு பழிதீர்க்கும் விதமாக அரங்கேற்றப்பட்ட கொலை என்பது தெரியவந்தது.
  • இதில், கொலையாளிகளை போலீசார் கைது செய்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இருந்தது தெரியவந்துள்ளது.
  • அந்த கணக்குகளில் "கொலைக்கு பழி தீர்ப்போம்" என பதிவிட்டும், வன்முறையில் ஈடுபடுவதை ஹீரோயிசமாக எண்ணும் வகையில், பட்டாகத்தி, அரிவாளுடன் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்