சொந்த அண்ணிக்கு கொழுந்தன் ஸ்கெட்ச்! ஓடும் பேருந்தில் கழுத்தறுத்து கொலை - ரத்த வெள்ளத்தில் மிதந்த பஸ்
உலுப்பகுடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பேருந்தில், கணவாய்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான கோபியின் மனைவி தமயந்தி பயணம் செய்துள்ளார். அதே பேருந்தில் தமயந்தியின் கொழுந்தனார் ராஜாங்கம், தனது 13 வயது மகனுடன் பயணம் செய்த நிலையில், பேருந்து கோபால்பட்டி என்ற இடத்தில் வந்த போது, ராஜாங்கம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தமயந்தியின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த தமயந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் சடலத்தை கைப்பற்றியதோடு, தப்பியோடிய ராஜாங்கத்தை தேடி வருகின்றனர்.
Next Story