தம்பியின் நிறுவனத்தை தட்டி தூக்கிய முகேஷ் அம்பானி |

x

அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனத்தை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ 3 ஆயிரத்து 720 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. வாராக்கடன்கள் காரணமாக, அனில் அம்பானியின் அனைத்து நிறுவனங்களும் திவால் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளன. 43 ஆயிரத்து 500 செல்போன் டவர்களும், 1.70 லட்சம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஃபைபர் ஆப்டிக் வலை பின்னலும் கொண்ட ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனத்தை, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலத்தில் வாங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்