2002 To 2022 வரை ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக முகேஷ் அம்பானி..

x

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக முகேஷ் அம்பானி பதவியேற்று 20 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், அவரின் தலைமையில் ரிலையன்ஸ் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது

2002இல், ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனர் திருபாய் அம்பானி மரணமடைந்த பின், முகேஷ் அம்பானி ரிலையன்ஸின் நிர்வாக இயக்குனர் மற்றும் சேர்மனாக பதவியேற்றார்.

கடந்த 20 ஆண்டுகளில் ரிலையன்ஸின் வருவாய் ஆண்டுக்கு 15 சதவீதம் அதிகரித்து, தற்போது 7.92 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

நிகர லாபம் ஆண்டுக்கு 16 சதவீதம் அதிகரித்து, தற்போது 67,845 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில், ரிலையன்ஸின் பங்குதாரர்களுக்கு, 17.4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் சொத்து மதிப்பை உருவாக்கியுள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்பட்ட பின், டேடா கட்டணங்கள் 2016இல் ஒரு ஜி.பி 500 ரூபாயாக இருந்து தற்போது 12 ரூபாயாக, உலகிலேயே மிக குறைந்த அளவுக்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்