1,700 படங்களுக்கு இசையமைத்த எம்.எஸ்.வி,,, கண்ணதான் - எம்.எஸ்.வி கூட்டணி மகிமை
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்த தினம்
இன்று. அவரின் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கிறது.
கேரளாவின் பாலக்காடு அருகில், எலப்பள்ளி என்ற கிராமத்தில் 1928ல் பிறந்த எம்.எஸ்.வி, இளம் வயதிலேயே இசையில்ஆர்வம் காட்டினார். நீலகண்ட பாகவதிரிடம் சங்கீதம் கற்று 13 வயதில் அரங்கேற்றம் செய்தார்.
குடும்ப வறுமை காரணமாக பள்ளி கல்வியை பாதியில் நிறுத்தி விட்டு, கோவை ஜூப்பிட்டர் பிச்சர்ஸ் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக சேர்ந்தார்.
பின்னர் சி.ஆர்.சுப்புராமன் என்ற திரைபட இசையமைப் பாளரிடம் உதவியாளாராக பணியாற்றினார். அவருடன் பணி புரிந்த டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து பின்னர் ஏராளமான படங்களுக்கு இசையமைத்து பெரும் புகழ் பெற்றார்.
1953ல் வெளிவந்த 'ஜெனோவா' படத்துக்கு முதன் முதலாக இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தியுடன் இணைந்தும் தனியாகவும் சுமார் 1700 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார்.
கண்ணதாசன் இவரின் நெருங்கிய நண்பர். இருவரின் கூட்டணியில் அற்புதமான, காலத்தை வெல்லும் பாடல்கள் உருவாகின.
மாகாதேவி படத்தில், பட்டுக்கோட்டை கல்யாண சுந்திரம் எழுதிய இந்த பாடல் இவரின் இசையில் பெரும் ஹிட்டானது
மாலையிட்ட மங்கை படத்தில், டி.ஆர்.மகாலிங்கம் பாடிய பாடல் இன்றும் ரசிகர்களை ஈர்க்கிறது.
பாக்கியலக்ஷ்மி படத்தில், செளகார் ஜானகியின் நடிப்பில், அனைவரையும் உருவக வைத்த பாடல்.
பாசமலர் படத்தில், அண்ணன், தங்கை பாசத்தை பிழிந்து கொடுக்கும் எம்.எஸ்.வியின் இசை
புதிய பறவை படத்தில் வரும் எங்கே நிம்மதி பாடலுக்கு அதிகபட்சம் 300 இசைக் கருவிகளை பயன்படுத்தி சாதனை படைத்தார்.
காதலா காதலா உள்ளிட்ட பல படங்களில் நடித்த எம்.எஸ்.வி, உடல் நலக் குறைவு காரணமாக, 2015 ஜூலை 14இல் காலமானார்.